அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது! – குடியரசு தலைவர் வழங்கினார்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (13:00 IST)
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ராணுவ விருதான வீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்திய ராணுவத்தில் நாட்டிற்காக சிறப்பாக செயலாற்றும் வீரர்களுக்கு பரம் வீர் சக்ரா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு விருதுகள் வழங்கப்படாத நிலையில் தற்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ராணுவ விருதான வீர் சக்ரா விருதை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த வழங்கினார். கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியவர் அபிநந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்