தடுப்பூசியை வீணாக்காத தமிழகம்: அமைச்சர் பெருமிதம்!

திங்கள், 22 நவம்பர் 2021 (10:21 IST)
தடுப்பூசியை வீணாக்காமல், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் புதுவை, நாகலாந்து, மேகாலயா மற்றும் மணிபூர் ஆகிய 4 மாநிலங்களில் தடுப்பூசி மிகவும் குறைவாக போடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 
 
இதனையடுத்து இந்த நான்கு மாநில நிர்வாகிகள் இடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகவும் இந்த நான்கு மாநிலங்களில் தடுப்பூசித் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வழிகாட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்நிலையில் பொது சுகாதாரத்துறையின் விதிகளின் படி பொது இடங்களில் வருவோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வரவேண்டும் என சொல்லப்பட்டிருப்பதால் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் அதிகரித்துள்ளது. அதோடு தடுப்பூசியை வீணாக்காமல், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்