அமேசான் நிறுவனரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்தவும் திட்டம்!

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (16:15 IST)
அமேசான் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெஃப் பெசோஸ் ஜனவரி 15,16 ஆகிய இரண்டு நாட்கள்  இந்தியா வர இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்களை அவர்  சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அவர்களின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்களால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஏற்கனவே சிறு குறு வியாபாரிகள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த போராட்டத்தில் அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் டெல்லி மட்டுமின்றி இந்தியாவில் உள்ள 300க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களில் லட்சக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்