இந்நிலையில் இந்தியா, ரஷ்யாவிடம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது இந்திய - அமெரிக்காவிற்கு இடையேயான நல்லுரவை முறிக்க கூடும் என தெரிகிறது.
இது குறித்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்குவதன் மூலம், அமெரிக்காவிடமிருந்து எப்-35 ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ ரீதியிலான வர்த்தக உறவில் கடந்த 15 ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அதேசமயத்தில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் ராணுவ வலிமையை குறைக்கும் விதமான எந்த முடிவையும் எடுக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.