சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

Siva

வெள்ளி, 7 மார்ச் 2025 (17:53 IST)
சென்னை பல்கலைக்கழக இளங்கலை முதுகலை செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் மறு மதிப்பீட்டுக்கு தகுதி உள்ள மாணவர்கள் மார்ச் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவதுள்
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இளங்கலை, முதுகலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.  > www.egovernance.unom.ac.in/results | www.exam.unom.ac.in/results
 
கடந்த 2022-2023-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பின்பு இளங்கலை படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும், அதேபோல், 2023-2024-ம் கல்வி ஆண்டு மற்றும் அதன் பிறகு முதுகலை படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும் விடைத்தாள் மறுமதிப்பீட்டு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். அவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி மார்ச் 10 முதல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திக்கொள்ளலாம்.
 
அதேபோல், இளங்கலை பயிலும் மாணவர்கள் மறுகூட்டலுக்கு மார்ச் 10 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.300. இக்கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்திவிடலாம்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்