இந்தியாவுக்கு எப்போது வருகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட்?

சனி, 11 ஜனவரி 2020 (18:34 IST)
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் வெளியாகின. இதனைத்தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
கேலக்ஸி எஸ்10 லைட் சிறப்பம்சங்கள்: 
# 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 
# ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, சூப்பர் ஸ்டெடி OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 
 # 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 5 எம்.பி. மேக்ரோ கேமரா
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 
# நிரங்கள்: ப்ரிசம் வைட், ப்ரிசம் பிளாக் மற்றும் ப்ரிசம் புளூ 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்