350 வயதில் ஒரு வாக்காளர்: ஆந்திர தேர்தல் ஆணையத்தின் அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (08:29 IST)
ஆந்திர மாநிலத்தின் வாக்காளர் பட்டியலை அம்மாநில தேர்தல ஆணையம் வெளியிட்டிருக்கும் நிலையில் இந்த பட்டியலில் ஒரு வாக்காளரின் வயது 350 என்று இருப்பதால் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநில அரசின் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த பாட்டியலில் 15 சதவீத வாக்காளர்களின் விவரங்கள் தவறாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஒரு வாக்காளரின் வயது 350 என்று இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அலுவலக்த்தின் மென்பொருள் பொறியாளர்கள் ஆய்வு செய்ததில், அந்த குறிப்பிட்ட வாக்காளரின் வயது 35 என்று இருப்பதற்கு பதிலாக 350 என்று இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் 3.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வெளியான வாக்காளர் பட்டியலில் 52.67 லட்ச வாக்காளர்களின் விவரங்களில் தவறு இருப்பதாகவும் இந்த தவறுகளை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்