யானை பலத்துடன் கரையை கடக்குமா கஜா புயல்? அதி கன மழைக்கு வாய்ப்பு!

ஞாயிறு, 11 நவம்பர் 2018 (10:53 IST)
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தாழுவு நிலை தர்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. 
 
இன்னும் 2 நாட்களில் தமிழகத்தை நோக்கி இந்த புயல் நகர்ந்து வரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வட தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 15 ஆம் தேதி தமிழகத்தில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாம். 
 
இந்த புயலுக்கு கஜா என்ற பெயரை இலங்கை வைத்துள்ளது. கஜா என்றால் யானை என்று அர்த்தமாம். எனவே, யானை பலத்துடன் இந்த புயல் கரையை கடக்குமோ என்னவோ? 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்