தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
ஐதராபாத் நகரில் உள்ள புரனாபூல் 100 அடிசாலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, காலையில், அடையாளம் தெரியாத சிலர், அரிவாள், கத்தி உள்ளிட்ட பலத்த ஆயுதங்களுடன் வந்து, ஒரு கூலித் தொழிலாளியை கொடூரமாகத் தாக்கினர்.
இந்தச் சம்பவத்தில் தொழிலாளி சம்பவவ இடத்திலேயே பலியானதாக தகவல் வெளியாகிறது.
இந்தச் சம்பவத்தின் போது பொதுமக்கள் வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது;.
போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்த நிலையில் உயிரிழந்தவர் கோத்தி இஸ்தாமியா பஜாரைச் சேர்ந்த ஜங்கம் சாய் நாத் (32) எனத் தெரிவித்துள்ளார்.