அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது, பாஜகவுக்குத்தான் ஆதரவு: பிரபல கட்சி தலைவர்

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (19:31 IST)
அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என்றும் பாஜகவுக்கு தான் ஆதரவு என பிரபல கட்சி தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என அண்ணாமலை உள்பட பல பாஜகவினர் தெரிவித்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என்றும் பாஜக எந்த பக்கம் இருக்கிறதோ அந்த கூட்டணிக்கு தான் ஆதரவு என்றும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார். 
 
இன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏசி சண்முகம் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டபோது பாஜக இருக்கும் பக்கம்தான் நான் இருப்பேன், பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்