சந்திரயான் 2 தோல்வியா?? பின் வாங்கிய இஸ்ரோ சிவன்!

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (11:17 IST)
சந்திரயான் 2, 98% வெற்றி பெற்றுள்ளதாக கூறியது தன்னுடைய கருத்து அல்ல என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 
 
நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சந்திராயன் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ஆகியவை இணைந்து அனுப்பப்பட்டிருந்தது.
 
விக்ரம் லேண்டர் கடந்த மாதம் ஏழாம் தேதி நிலவில் தரையிறங்கும் போது திடீரென தகவல் தொடர்பை இழந்தது. இதனை அடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவும், நாசாவும் தீவிரமாக முயற்சி செய்தும் விக்ரம் லேண்டரில் இருந்து எந்தவிதமான சிக்னலும் பெற முடியவில்லை.
இந்நிலையில் சந்திரயான் 2, 98% வெற்றி பெற்றதாக் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து விஞ்ஞானிகள் பலர் கேள்வி எழுப்பவே தனது கருத்தில் இருந்து மாறுப்பட்டுள்ளார். 
 
சமீபத்தில் சிவ கூறியதாவது, விக்ரம் லேண்டர் தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டது. அதற்கான காரணங்கள் என்ன என ஆராய் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழு முழுமையான ஆய்வை மேற்கொண்டு சந்திரயான் 98% வெற்றி பெற்றுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு செய்தது. 
 
எனவே, சந்திரயான் 2, 98% வெற்றி பெற்றுள்ளதாக நான் கூறியது என்னுடைய கருத்து அல்ல, அதற்கான குழு ஆராய்ந்து மதிப்பீடு செய்தது என இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்