ஆனால் விடாமுயற்சியை கைவிடாத இஸ்ரோ, கடுமையாக முயன்று ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் எந்த சேதமும் இல்லாமல் சாய்ந்து கிடக்கிறது என கண்டறிந்தனர். பின்பு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்தனர். ஆனால் நிலவில் இரவு காலம் வருவதற்குள் தொடர்பு கொள்ளவேண்டும் எனவும், அதன் பிறகு சூரிய ஒளி இல்லாததால் மின் சக்தியை பெற முடியாது எனவு நிர்பந்தம் ஏற்பட்டது.
அதன் படி இன்றோடு நிலவின் பகல் காலம் முடிவடைகிறது. இதனிடையே இஸ்ரோ, விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை ஆர்பிட்டர் மூலம் படம் பிடித்ததாக தகவல் வந்தது. எனினும் இன்றோடு விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு முடிவடைவதால், இஸ்ரோவிடமிருந்து லேண்டர் குறித்த தகவல் ஏதும் வராதா? என நாடே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.