சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்

Mahendran
சனி, 27 ஏப்ரல் 2024 (09:23 IST)
சளி காய்ச்சலுக்கு அளிக்கப்படும் 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சளி காய்ச்சல் உள்பட அனைத்து நோய்களுக்கும் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மறந்து தர கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ததில் பல போலி மருந்துகளும் தரமற்ற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது 
 
குறிப்பாக சளி, காய்ச்சல், வலி நிவாரணி, கிருமி தொற்று , வைட்டமின் பாதிப்பு உள்ளிட்ட குறைகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மாத்திரைகள் தரமற்றவை என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது 
 
இந்த மருந்து மாத்திரைகள் பெரும்பாலும் இமாச்சல பிரதேசம், மேற்குவங்கம் ஆங்கிலம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தனது https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் இந்த மருந்துகள் குறித்த முழு விவரங்களை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
மேலும் தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்