9 வருடத்திற்கு முன் வைத்த மை அழியவில்லை.. தேர்தலில் வாக்களிக்க முடியாத பெண்..!

Mahendran
சனி, 27 ஏப்ரல் 2024 (09:18 IST)
9 வருடங்களுக்கு முன்னர் தேர்தலில் ஒரு பெண் வாக்களித்த நிலையில் அவரது விரலில் வைத்த மை இன்னும் அழியாததால் அதன் பிறகு அவர் எந்த தேர்தலில் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில் நேற்று தேர்தல் நடைபெற்ற போது விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்ற 62 வயது பெண் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் வாக்களித்த போது அவரது விரலில் மை வைக்கப்பட்டது

அந்த மை இன்று வரை அழியாத நிலையில் அவரால் அதன் பின்னர் நடந்த எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியவில்லை. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை

இந்த நிலையில் நேற்று நடந்த தேர்தலிலும் அவர் வாக்களிக்க செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.  ஒன்பது வருடங்களாக அழியாத மை குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கை எடுக்காததால் அவரால் வாக்களிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு வைத்த மை தான் அனைத்து வாக்காளர்களுக்கும் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு மட்டும் ஏன் 9 ஆண்டுகளாக விரலில் மை அழியவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்