பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி, 5ஜி எப்போது கிடைக்கும்? மத்திய அரசு தகவல்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (07:57 IST)
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் உள்பட பல நிறுவனங்கள் தற்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை செய்து வரும் நிலையில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவையை மட்டுமே தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
 
இந்த நிலையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று உள்ள மத்திய அரசு 2023 ஆம் ஆண்டில் 4ஜி சேவையும் 2024 ஆம் ஆண்டில் 5ஜி சேவையும் வழங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார். 
 
இந்த ஆண்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அதேபோல் 2024 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி  சேவை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் அவ்வப்போது அனைத்து சேவைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்