அமர்நாத் மேகவெடிப்பு கனமழை: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (11:48 IST)
அமர்நாத் மேகவெடிப்பு கனமழை: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு!
அமர்நாத் யாத்திரை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில்  நேற்று 9 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கனமழை காரணமாக சுமார் 40 பேரை காணவில்லை என்றும் அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்றது சென்றிருக்கலாம் என்று கூறப்படுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது 
 
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்