அமர்நாத்தில் மேக வெடிப்பால் வெள்ளம் - 10பேர் உயிரிழப்பு

வெள்ளி, 8 ஜூலை 2022 (20:59 IST)
அமர்நாத்தில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு கனமழை பெய்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் நிலையில் திடீரென மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது
 
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இந்த சம்பவம் காரணமாக தற்போது அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்