பிரிட்டன் பிரதமராகிறாரா இந்தியா வம்சாவளி ரிஷி சுனக்?

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (10:42 IST)
பிரிட்டன் பிரதமராகிறாரா இந்தியா வம்சாவளி ரிஷி சுனக்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இருந்த நிதி அமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர் 
 
இதனை அடுத்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
பிரதமர் பதவிக்கான போட்டியில் அவர் இருப்பதாகவும் அவர் தனது குடும்ப பாரம்பரியத்தை கூறி டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த பிரிட்டனை இந்தியர் ஒருவர் ஆட்சி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்