12 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்.. பரிதாபமாக பலியான உயிர்..!

Webdunia
புதன், 3 மே 2023 (10:27 IST)
12 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய நிலையில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 
 
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிபிகஞ்ச் என்ற பகுதியில் பனிரெண்டு வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த சிறுவனை சூழ்ந்த தெருநாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் அந்த சிறுவனுடன் விளையாடிய மேலும் ஒரு சிறுவனையும் தெருநாய்கள் கடித்ததால் அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே தெரு நாய்கள் சிறுவர் சிறுமிகளை கடித்து குதறி உயிரிழக்க வைத்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் தற்போது மேலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இதனை அடுத்து தெரு நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்