எனவே, உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோ கூட்டமைப்புகளும் நிதியுதவி மற்றும் ஆயுதவுதவி செய்து வருகின்றன.
இதனால், உக்ரைன், ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்,கடந்தாண்டு டிசம்பர் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் சுமார் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
மேலும், 80 பேர் இப்போரில் காயமடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளளர் ஜான் ஜெர்பி, கடந்த 5 மாதத்தில் ரஷிய வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது எங்கள் கணிப்பு. ரஷியாவினால் முக்கியத்துமுள்ள எந்த இடத்தையும் கைப்பற்றமுடியவில்லை என்று கூறியுள்ளார்.