இந்தியாவில் ஒரே நாளில் 12,885 பேர்களுக்கு கொரோனா!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (13:18 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பேர்களுக்கு 12,885 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களை விட இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் இந்தியாவில் ஒரே நாளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 15,054 பேர்கள் குணம் அடைந்திருப்பதாகவும் இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 3,36,97,740 என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 461  பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,59,652  என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 1,48,579 பேர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்