"அரிமாபட்டி சக்திவேல்"திரை விமர்சனம்

J.Durai
புதன், 6 மார்ச் 2024 (13:38 IST)
லைப் சைக்கல் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கே,மற்றும் அஜிஸ்.பி ஆகியோர்கள் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் "அரிமாபட்டி சக்திவேல்"
 
இத்திரைப்படத்தில் சார்லி,பவன்.கே, மேகனா எலோன், இமான் அண்ணாச்சி, சூப்பர் குட் சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி,பிர்லா போஸ்,அழகு,செந்தி குமாரி,சக்திவேல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்
 
திருச்சி அருகே அருகே அரிமாபட்டி என்ற  ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வழி வகுத்து வாழ்ந்து வருகின்றனர்
 
இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் நயாகன் சக்திவேல்(பவன்) வேறு ஒரு ஜாதி பெண்ணை காதலிக்கிறான்
 
இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்புக் தெரிவிக்கின்றனர் 
 
அதையும் மீறி நாயகன்  சக்திவேல்  நாயகி  (மேகனா) வை வெளியூருக்கு கூட்டி சென்று மணமுடிக்கிறார்
 
இதன் பிறகு கட்டுப்பாடோடு வாழ்ந்து வந்த கிராமத்து மக்கள் இவர்களது காதலை ஏற்று  கொண்டார்களா? இதன் பிறகு என்ன என்ன பிரச்சனைகளை இவர்கள் சந்தித்தார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை
 
நாயகன் பவன் தனது கதாபாத்திரத்தை புரிந்து நடிக்க முயற்ச்சித்துள்ளார்
 
நாயகி மேக்னா தனது  விழிகளாலும், புன்னகையாலும் பார்வையாளர்களை வசீகரித்துள்ளார்
 
சார்லி தனது அனுபவ நடிப்பை கொடுத்து சிறப்பாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்
 
பிர்லா போஸ் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றார் போல் குறைவில்லாமல் நடித்துள்ளார்
 
படத்தில் அரசியல்வாதியாக வலம் வரும்  இமான் அண்ணாச்சி  சிரிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பார்வையாளர்களுக்கு சிரிப்பு வரவில்லை
 
மணி அமுதவன் இசை சிறப்பு
 
ஜெ பி மேன் கேமரா கண்கள் கிராமத்தின் இயற்கையை அழகாக படம் பிடித்துள்ளது
 
 மொத்தத்தில் "அரிமாபட்டி சத்திவேல்" உண்மை சம்பவம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்