குடி மகன்களால் குடும்பம் படும் பாடு..! - "கிளாஸ்மேட்ஸ் "திரை விமர்சனம்!

J.Durai

திங்கள், 26 பிப்ரவரி 2024 (16:40 IST)
அங்கையர் கண்ணன் ஜீவா தயாரித்து சரவண சக்தி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்" கிளாஸ்மேட்ஸ்"


 
இத்திரைப்படத்தில் அங்கையர் கண்ணன்,சரவண சக்தி, அயலி, மயில்சாமி, சாம்ஸ், பிரணா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்

வாடகைக் கார் ஓட்டுநராக இருக்கும் கண்ணன் (அங்கையர் கண்ணன்), மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, அவரது வருமானத்தில் ஜாலியாக ஊர் சுற்றி வரும் சக்தி(சரவண சக்தி) . இருவரும் மாப்பிள்ளை - தாய்மாமன் உறவு இவர்கள் இருவரும் நாள் முழுவதும் குடித்து ஜாலியாக இருந்து வந்தனர்

கண்ணனின் மனைவியான  பிரணாவின் உணர்வுகளை  சற்றும் புரிந்து கொள்ளாத கண்ணன் குடிபோதையில் ஒரு  சாலை விபத்து குள்ளாகி வழக்கு வாங்கிய பிறகும் திருந்தவில்லை. சக்தியின்குடும்பமோ அடுத்தடுத்து அவமானங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த இரண்டு குடிமகன்களும் திருந்தினார்களா? இல்லையா?என்ன காரணத்தினால் குடிபோதையை விட்டு வெளியே வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? என்பது தான் படத்தின் கதை

 குடிமகன்களால் அவர்களது குடும்பங்கள்  எதிர்கொள்ளும் கஷ்டங்கள் எப்படிப்பட்டது என்பதை,நகைச்சுவையாகவும் உணர்வு பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி

அங்கையர் கண்ணனும் சரவணசக்தியும் குடித்து விட்டுச் கூத்தடிக்கும் காட்சிகளில் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மனைவி தனது கணவனிடம் எதிர்பாக்கும் அன்பும் ஏக்கங்களையும் தனது  சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பிரணா.

தாய்மாமனாக வரும்  மறைந்த மயில்சாமி தனது அனுபவ நடிப்பால் நகைச்சுவையாக  சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்

சாம்ஸ் வரும் காட்சிகள் நம்மை சிரிக்க  வைக்கின்றார். அயலியின் கிளைமாக்ஸ் நடிப்பு காட்சிகள் படத்திற்கு பலம்.  மொத்தத்தில்" கிளாஸ்மேட்ஸ்" குடிப்பவரின் குடும்பத்தை கெடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்