நேற்று போல் பெரிய அளவில் மாற்றமின்றி பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
புதன், 28 ஆகஸ்ட் 2024 (10:09 IST)
நேற்றைய பங்குச்சந்தை மிகவும் சிறிய அளவில்தான் உயர்ந்தது என்றும் நேற்றைய வர்த்தக முடிவில் வெறும் 50 புள்ளிகள் மட்டுமே சென்செக்ஸ் உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நேற்று போலவே இன்றும் சிறிய அளவில் தான் பங்குச்சந்தை வர்த்தகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 50 புள்ளிகள் குறைந்து 81, 648 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 27 புள்ளிகள் மட்டுமே பிறந்து 24 ஆயிரத்து 994 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை வர்த்தகம் இன்றும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் எனவே புதிதாக பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யும் ஆறும் அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஐடிசி, சவுத் இந்தியன் பேங்க் , தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, எஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்