சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Mahendran

புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:47 IST)
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய போது சரிவில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி தற்போது ஏற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இந்த நிலையில் இன்று காலை திடீர் என பங்குச்சந்தை 150 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் குறைந்தது. ஆனால் படிப்படியாக தற்போது மீண்டும் பங்கு சந்தை உயர்ந்து வருவதை அடுத்து நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 24, 723 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதே போல் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 19 புள்ளிகள் மட்டும் சரிவில் 80,789 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று மாலைக்குள் பங்குச்சந்தை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், கல்யாண் ஜூவல்லர்ஸ், ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்