இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி தகவல்கள்..!

Siva

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:57 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தையில் பெரிய அளவு மாற்றம் இன்றி வர்த்தகம் ஆகி வருகிறது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 4 புள்ளிகள் மட்டும் குறைந்து 81 ஆயிரத்து 38 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 4 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 819 என்ற பள்ளிகளில் விற்பனையாகி வருகிறது.
 
பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட எந்தவித மாற்றமும் இன்றி வர்த்தகம் ஆகி வருவதால் இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய சங்குகள் குறைந்துள்ளதாகவும் கரூர் வைசியா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், எஸ் பேங்க் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்