வாரத்தின் முதல் நாளே 500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva

திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (09:59 IST)
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய ஒரு சில நிமிடங்கள் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 565 புள்ளிகள் உயர்ந்த 81 ஆயிரத்து 640 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 162 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 24 ஆயிரத்து 985 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளே உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஐடிசி, மணப்புரம் கோல்டு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ALSO READ: 6 மாதம் ஆகியும் இன்னும் பதவி கிடைக்கவில்லை.. பாஜக கூட்டத்தில் விஜயதாரணி அதிருப்தி..!
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்