மீண்டும் 8000 ரூபாய்க்குள் தங்கம் விலை.. தொடர் சரிவால் மக்கள் மகிழ்ச்சி..!

Siva
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (11:06 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரு கிராம் 8000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில், தற்போது 8000 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகி வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாயும், ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் குறைந்துள்ளது. இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து  ரூபாய்   7,960 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 400 குறைந்து  ரூபாய்  63,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,683 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,464 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 105.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  105,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva


 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்