இந்தி பேசும் ராகுல் காந்தி, இந்தி எதிர்ப்பை ஏற்றுக்கொள்கிறாரா? அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!

Mahendran
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (11:01 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்  பதிவில், 'இந்தி மொழி, மற்ற மொழிகளை விழுங்கி விட்டது. அந்த மொழிகள் தற்போது உயிர் வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன' என்று கூறியுள்ளார். முதலமைச்சரின் இந்த பதிவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

"சமூகத்தை பிரிக்கும் இத்தகைய மேலோட்டமான முயற்சிகளால் மோசமான நிர்வாகம் ஒருபோதும் மறைக்கப்படாது. இந்தி பேசும் தொகுதியின் எம்பி என்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதை ஏற்றுக் கொள்கிறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களின் இந்த கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் அவர் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,"

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்