இலவச 5ஜி குடுத்து நஷ்டப்படுத்துறாங்க! – ஜியோ மீது வோடபோன் புகார்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (16:19 IST)
இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் மீது வோடபோன் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் 5ஜி சேவைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பல நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து வருகின்றன. 5ஜி சேவை குறித்த பரீட்சார்ந்த முயற்சியாக 4ஜி டேட்டா பேக்கிலேயே 5ஜி வேகத்தை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் மற்றொரு பிரபல நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனம் சக நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ மீது TRAI-ல் புகார் அளித்துள்ளது. அதில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் இலவச 5ஜி சேவையை அளிப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள், தாங்கள் 5ஜி சேவையை இலவசமாக வழங்கவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் 4ஜி ரீசார்ஜ் ப்ளான்களுடன் கூடுதல் பலனாக 5ஜி சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தி வரும் நிலையில் வோடபோன் இன்னும் தங்கள் 5ஜி சேவையை தொடங்காததால் வாடிக்கையாளர்களை இழந்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்