மின்சார ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி..!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:26 IST)
குஜராத் மாநிலத்தில் இன்று மின்சார ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த ரயிலில் உள்ள பெட்டிகள் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் ஒன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு புறப்பட யாராக இருந்தது. அப்போது திடீரென ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு பக்கத்து பெட்டிகளுக்கும் பரவியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரயிலில் இருந்து இறங்கினார். 
 
இந்த தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பல பெட்டிகள் தீ விபத்தால் சேதம் அடைந்தன. 
 
ஆனால் அதே நேரத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்