நாளை புறநகர் ரயில்கள் அட்டவணையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (15:39 IST)
நாளை சென்னை புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுமுறை தினத்தின் போது புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்படும் என்றும் விடுமுறை நாளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி புறநகர் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வரிசையில் நாளை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் நாட்கள் அட்டவணை மாற்றப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி நாளை அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்களை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த அட்டவணையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்