ஐபிஎல்-2021; சென்னை கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (23:15 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 44வது போட்டியில் சென்னை – ஐதராபாத் அணிகள் மோதின. இதில், சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

 இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில்7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134  ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 135 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது.

சென்னை அணியினர் பேட்டிங்கில் கைகொடுப்பார்களா, இலக்கை எட்டி ஜெயிப்பார்களா என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன்  காத்திருந்ததற்கு சென்னை அணி சிறப்பான பேட்டிங் செய்தது.

சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் சென்னை அணி இத்தொடரின் முதலாவது அணியாக ஃப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்