இர்பான் பதானின் கனவு அணியில் இடம்பிடிக்காத கோலி, தோனி & ரோஹித்!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:20 IST)
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார்.

13 ஆவது ஐபிஎல் சீசன் கோலாகலமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் இதில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட கனவு அணியை பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானும் தனது கனவு அணியை வெளியிட்டுள்ளார்.

அதில் இந்திய அணியின் கேப்டன் கோலி, முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய யாருமே இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இர்பான் பதானின் கனவு அணி:-
கே.எல் ராகுல், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், பொலார்டு (கேப்டன்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், ராகுல் திவாடியா, யுஸ்வேந்திர சாஹல், காகிசோ ரபாடா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்