கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: ஐதராபாத்தை வீழ்த்திய பஞ்சாப்!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (05:37 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22வது போட்டியில் பஞ்சாப் அணி கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
ஸ்கோர் விபரம்
 
ஐதராபாத் அணி: 150/4  20 ஓவர்கள்
 
வார்னர்: 70
விஜய்சங்கர்: 26
ஹூடா: 14
 
பஞ்சாப் அணி: 151/4  20 ஓவர்கள்
 
கே.எல்.ராகுல்: 71
அகர்வல்: 55 
கெய்லே: 16
 
ஆட்டநாயகன்: கே.எல்.ராகுல்
 
இன்றைய போட்டி: சென்னை மற்றும் கொல்கத்தா
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்