இயற்கையான நிறத்தைப் பெற உதவும் பாதாம் !!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (00:00 IST)
முன்பைவிட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.
 
பாதாம் பருப்பின் மூலமாக நமது முகத்தின் அழகை பராமரிப்பதற்கு நிறைய முறைகள் உள்ளது. 
 
பாதாம் இரவே ஊறவைத்துவிடுங்கள். மறு நாள் பாலுடன் அரைத்து முகத்தில் போடவும். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால்  இழந்த நிறம் பெறலாம்.
 
பாதாம் பொடியுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமடையும்.
 
இரண்டுமே இறந்த செல்களை வெளியேற்றும் அத்னால் உண்டான கருமை படிப்படியாக மறையும். பாதாம் பொடியுடன் பப்பாளியை கலந்து முகத்தில் போடுங்கள்.  10 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் தரும். முக்கியமாக எண்னெய் சருமம் உள்ளவர்கள் இதனை கடைபிடிக்கவும்.
 
பாதாம் பொடி மற்றும் ஓட்ஸ் பொடி ஆகிய்வற்றை சம அளவு கலந்து யோகார்ட் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகத்தின் நிறம் உடனடியாக அதிகரிப்பதை பார்ப்பீர்கள்.
 
வாழைப்பழம் சருமத்தை இருதுவாக்கி பளபளப்பை தரும். பாதாம் பொடியுடன் மசித்த வாழைப்பழத்தை கலந்து முகத்தில் போடுங்கள். சருமம் உயிர்ப்புடனும் நிறம் பெற்றும் இருக்கும்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்