வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய உதவும் குறிப்புகள் !!

வெயிலால் சருமத்தின் புத்துணர்ச்சி குறையும். அப்போது பாலில் ரோஜா இதழ்களை சிறிது நேரம் ஊறவைத்து அதை முகத்தில் தடவி கழுதி வந்தால்  புதுப்பொலிவு ஏற்படும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் மிருதுவாகும். சந்தனம், பால், கடலை மாவு,  மஞ்சள் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறும்.
 
தேங்காய் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும். பன்னீர், சந்தனம், உலர்ந்த ரோசா இதழ்கள் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், தோலின் நிறம் பொலிவு பெறும்.
 
வேப்பிலை, துளசி மற்றும் புதினா இலைகளை சமமாக எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு தேக்கரண்டி எடுத்து பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
 
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமானால் தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம் பழச்சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளித்தால் நாளடைவில் கருமை  நிறம் போய்விடும். தோல் வறண்டும் சுருங்கியும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி சிறிது நேரம் ஊறவைத்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
 
வெயிலினால் ஏற்பட்ட கருமை மறைய ஆரஞ்சுப் பழத் தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, பாலுடன் கலந்து தோலில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வரவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்