தினமும் ஏதாவதொரு பழம் ஏன் சாப்பிட வேண்டும்...?

பழங்களில் எண்ணற்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பழங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் திறன் பெற்றவை.


தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரிக்கும்.
 
உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் அரிசி சோற்றிலோ, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளிலோ கிடையாது, பழங்களில்  தான் வைட்டமின் ஏ,பி,சி,இ,கே ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
 
உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான். பழங்களில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் தாரளாமாக தினமும் சாப்பிடலாம்.
 
பழங்கள் சாப்பிடுவதால் உடலில் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல, வெளித்தோற்றத்துகும் பயன் உண்டு. பழங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது தோல்  பொலிவடையும், வயதான தோற்றம் இளமையிலேயே வருவது தடுக்கப்படும். செயற்கை கிரீம்களை முகத்தில் தடவுவதற்கு பதில் பழம் சாப்பிட்டு வந்தாலே  போதுமானது.
 
பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் முதலான நோய்கள் வருவதற்கான்  வாய்ப்புகள் மிகவும் குறைவு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்