தமிழில் ரீமேக் ஆகும் ஜூலியாஸ் ஜஸ்

Webdunia
வியாழன், 31 மே 2018 (16:57 IST)
கடந்த 2010ம் ஆண்டு குய்லேம் மோரலேஸ் இயக்கத்தில் பென்னன் ரியூடா நடிப்பில் ஸ்பானிஷ் மொழியில் வெளியான ஜூலியாஸ் ஜஸ் திரைப்படத்தை கபீர் லால் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்.
இந்த படத்தில் பென்னன் ரியூடா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். பார்வையற்ற தன் சகோதரி இறந்த மர்மத்தை கண்டுபிடிக்க ஜூலி முயற்சிப்பாள், அப்போது அவளுக்கு எதிர்பாராத விதமாக கண் பார்வை போய்விடும். இதன் பின்பும் தன் சகோதரியின் இறப்பில் உள்ள மர்மத்தை எப்படி கண்டுபிடிக்கிறாள் என்பது தான் ஜூலியாஸ் ஐஸ் படத்தின் மீதி கதை.
 
ஹாரர், திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்ட இப்படம் ஐரோப்பா நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
 
இப்படம் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தை கமலின் மைக்கேல் மதன காமராஜன் படத்தை ஒளிப்பதிவு செய்த கபீர் லால் தயாரித்து, இயக்கவுள்ளார். படத்தின் ஹிரோயின் குறித்த தகவலை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்