வேட்டையன் ரிலீஸுக்கு முன்பே அதற்குக் கள்ளிப்பால் கொடுத்துவிட்டார்கள்… இயக்குனர் வேதனை!

vinoth

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (11:11 IST)
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவானது.

படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். இதனால் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்தை விடக் குறைவான வசூலையே வேட்டையன் பெற்றது. ஆனாலும் ரஜினி மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஞானவேல் பேசிய ஒரு நேர்காணலில் “இப்போதெல்லாம் விமர்சனங்கள் வெறுப்புடன் பரப்பப்படுகின்றன. எங்கள் வேட்டையன் திரைப்படம் ரிலிஸாவதற்கு முன்பே “VettaiyanDisaster” என்ற ஹேஷ்டேக் பரப்பப்பட்டது. இது பிறந்த பெண் குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் கொடுப்பது போன்றதுதான்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்