‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கிற்கு வசனம் எழுதும் ராஜுமுருகன்

வியாழன், 1 பிப்ரவரி 2018 (16:03 IST)
‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜுமுருகன், ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கிற்கு வசனம் எழுதுகிறார்.
தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிறார் பாலா. விக்ரமின் மகன் த்ருவ்  விக்ரம் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். தமிழில் ‘வர்மா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
 
படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட வேறெந்த தகவலுமே இன்னும் அறிவிக்கப்படவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவல்படி, இந்த மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள். இந்நிலையில், ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜுமுருகன், இந்தப் படத்திற்கு வசனம் எழுதுவதாகத் தகவல்  கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்