ரஜினி அப்படி கூறவில்லை : பா.ரஞ்சித் விளக்கம்

Webdunia
வியாழன், 31 மே 2018 (16:17 IST)
போராட்டமே கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறவில்லை என இயக்குனர் பா. ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். அப்போது ஒருவர் நீங்கள் யார்? 100 கழித்து ஏன் வந்தீர்கள்? என ரஜினியிண்ட நேரிடையாக கேள்வி கேட்டு அவரை அதிர வைத்தார். 
 
இதனால், டிவிட்டர் நான்தான்பா ரஜினிகாந்த் என்கிற ஹேஸ்டேக் மிகவும் வைரலானது. மேலும்,  ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்று செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்தார்.
 
நியாயமான காரணத்திற்காக போராடிய மக்களை சமூக விரோதிகள் என ரஜினி சித்தரிக்கிறாரா என கேள்வி எழுப்பி பலரும் சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்த இயக்குனர் பா.ரஞ்சித் “ போராட்டமே கூடாது என அவர் கூறவில்லை. போராட்டத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கும் போது வேதனையாக இருக்கிறது என என்னிடம் கூறினார். போராடித்தான் எல்லாவற்றையும் பெற வேண்டும். நிச்சயமாகப் போராடுவோம்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்