ரூ.22,000 தள்ளுபடி: பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் தமாகா!

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (15:07 IST)
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட், பிக் ஷாப்பிங் சிறப்பு விற்பனையை துவங்கியுள்ளது. நேற்று (டிசம்பர் 6) துவங்கப்பட்ட இந்த விற்பனை நாளை (டிசம்பர் 8) வரை வழங்கப்படுகிறது. 
 
இந்த விற்பனையில் போகோ எஃப்1, மோட்டோ X4, மோட்டோரோலா ஒன் பவர், ஹானர் 10, அசுஸ் சென்ஃபோன் 5இசட், கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL, எல்ஜி ஜி7 தின்க் போன்ற ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மற்றும் பல்வேறு இதர சாதனங்கள் சலுகை விலையில் கிடைக்கின்றன.
 
ஸ்மார்ட்போன் தள்ளுபடி பட்டியல்: 
1. கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.5,000 தள்ளுபடி + எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
2. நோக்கியா 8 ரூ.18,000 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.36,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
3. எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.20,000 வரை குறைக்கப்பட்டு எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.17,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
4. சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ரூ.3,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
5. மோட்டோரோலா ஒன் பவர் ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.13,850 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது உடனடி தள்ளுபடி, வட்டியில்லா மாத தவணை, இன்சூரன்ஸ் வசதி ஆகிய சலுகைகளும் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்