ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள எலக்ட்ரிக் கார் ஒன்று 10 ரயில் பெட்டிகள் + 42 கார்களை சோதனை ஓட்டத்தில் இழுத்து சென்றுள்ளது.
அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்று 10 ரயில் பெட்டிகள் + 42 கார்கள் என மொத்தம் 500 டன் எடையை 1000 அடி தூரத்திற்கு இழுத்துச்சென்று சாதனை படைத்துள்ளது.
ஃஎப் 150 (F-150) என்று பெயரிடப்பட்டுள்ள பிக் அப் காரான இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த காரின் இழுக்கும் திறன் மற்றும் எடை தாங்கும் திறன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
முதலில் காலியான 10 ரயில் பெட்டிகளை முதலில் இழுத்தது, பின்னர் ரயில் பெட்டிகளுக்கு 42 கார்கள் வைக்கப்பட்டு அதனை இழுக்க வைக்கப்பட்டது. அதன்படி அந்த கார் 500 டன் எடையை 1000 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.