தலையிடும் முகேஷ் அம்பானி... தடையை உடைத்து வருமா டிக்டாக்...??

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (10:16 IST)
பைட்-டேன்ஸ் நிறுவனம் டிக்டாக்கில் முதலீடு செய்வது பற்றி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உடன் பேச்சுவார்த்தை என தகவல். 
 
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.
 
ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்தது. 
 
இதனைத்தொடர்ந்து சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் பைட்-டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. 
 
ஆனால் இப்போது பைட்-டேன்ஸ் நிறுவனம் டிக்டாக்கில் முதலீடு செய்வது பற்றி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த பேச்சு வார்த்தை கடந்த மாதம் துவங்கியது என கூறப்படுகிறது. 
 
இருப்பினும் இதுவரை இது குறித்து ரிலையன்ஸ், பைட்-டேன்ஸ் மற்றும் டிக்டாக் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்