டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசும் அதே முடிவை எடுக்கும் விதமாக செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது