உலகக்கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய ஆட்டங்கள்

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (16:52 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சுவீடன்- தென்கொரியா, பெல்ஜியம்- பனாமா, இங்கிலாந்து- துனிசியா  என 3 போட்டிகள் நடைபெற உள்ளது

 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த வாரம் முன்தினம் ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. 
 
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘எப்’ பிரிவில் உள்ள சுவீடன்- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ‘ஜி’ பிரிவில் உள்ள பெல்ஜியம்- பனாமா  அணிகள் மோதுகின்றன.
 
அதையடுத்து, இரவு 11.30மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- துனிசியா அணிகள் மோதுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்