ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.
சற்றுமுன் நடைபெற்ற டாஸில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து சென்னை அணி இன்னும் சில நிமிடங்களில் பந்து வீச தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணி வெறும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே, இந்த போட்டி அந்த அணிக்கு முக்கியத்துவம் இல்லாததாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், கேகேஆர் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 13 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு சிறிய வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணிக்காக கான்வே மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், இரு அணிகளின் ஆடும் லெவனில் உள்ள வீரர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.