மூடப்பட்ட தரம்சாலா ஏர்போர்ட்! ஐபிஎல் நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்! நிறுத்தப்படுமா ஐபிஎல் சீசன்?

Prasanth Karthick

புதன், 7 மே 2025 (15:59 IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் சூழல் காரணமாக பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக இந்திய எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

 

அவற்றில் தரம்சாலா விமான நிலையமும் ஒன்று. இந்த தரம்சாலாவில் உள்ள மலைகள் சூழ்ந்த மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. வரும் வியாழக்கிழமை பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி தரம்சாலாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அங்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் தரம்சாலா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் போர் தாக்குதல் அபாயங்கள் உள்ளதாக விமான நிலையங்கள் உள்ளிட்டவை கடும் கண்காணிப்பில் உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பயணிப்பது உள்ளிட்டவை பெரும் சிரமம் அளிக்கும் விஷயங்களாக உள்ளதால் ஐபிஎல் பாதியில் நிறுத்தப்படப்போகிறதா என்ற கேள்விகளும் உள்ளது.

 

ஆனால் தரம்சாலாவில் போட்டிகளை நடத்த முடியாத பட்சத்தில் அவற்றை வேறு மைதானங்களில் நடத்தவும், போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்