சதத்தைப் பற்றி நான் நினைச்சுக்கூட பாக்கல.. போட்டி முடிந்ததும் பேசிய ஜெய்ஸ்வால்!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (07:50 IST)
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய ராஜஸ்தானி 13.1 ஓவர்களில் இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து அந்த அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் 14 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 14 பந்துகளில் அரை சதம் அடித்தது சாதனையாக இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் அடித்து புதிய வரலாற்று சாதனையை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 47 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தார். இதனால் நூலிழையில் அவர் சதத்தை மிஸ் செய்தார். அதுபற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற போது பேசிய அவர் “நான் சதமடிப்பதை பற்றி நினைக்கவே இல்லை. என்னுடைய நோக்கமெல்லாம் விரைவாக போட்டியை வென்று அணியின் ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் என்பதாகதான் இருந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்